போட்டித் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் -விரைவில் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2015

போட்டித் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் -விரைவில் அறிவிப்பு

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளி களில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறி வித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறையின் 2015-16-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணிக்கு சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிக் கல்வித்துறை கடந்த 17.11.2014 அன்று அரசாணை வெளியிட்டது.பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மாநகராட்சிப் பள்ளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் ஆகியவை 1,188 சிறப் பாசிரியர்களை தேர்வுசெய்ய தேவைப்பட்டியல்களை சமர்ப்பித் துள்ளன.

சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி