அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சென்னை,செப்.23 (டி.என்.எஸ்) பா.ம.க ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும், என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பா.ம.க.வின் 2016-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையை கடந்த 16-ந் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.


இதனை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த முகாமில் டாக்டர். ராமதாஸ், ஜி.கே.மணி, டாக்டர்.அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.க நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:மக்கள் பா.ம.க.வை வித்தியாசமான கட்சி என்று எதிர்பார்க்கிறார்கள். நாம் ஒவ்வொருகுடும்பத்திற்கும் கல்வி, மின்சாரம் போன்றவற்றை இலவசமாக வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயை இலவசமாக்குவோம். பா.ம.க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்படமாட்டாது.மாறாக அந்த கட்டணங்களை குறைப்போம். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு 15 நாளுக்கும் ஊதியம் வழங்கப்படும். ஒரு சொட்டு மது, ஒரு பைசா ஊழல் இல்லாத அரசு அமைப்போம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். குடிசை இல்லாத தமிழகத்தை ஏற்படுத்துவோம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவோம். வேலையில்லாபட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவ செலவை முழுவதும் இலவசமாக வழங்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்

.பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், இதனை ஒரு சம்பிரதாயமாகத்தான் வெளியிட்டு வருகிறது. ஆனால், தற்போது பா.ம.க. சார்பில் வெளியிட்டு இருப்பது வரைவு தேர்தல் அறிக்கை தான். இறுதி தேர்தல் அறிக்கையின் முன்னோட்டம் தான். இதனை தமிழக மக்கள் முன் கொண்டு சென்று, ஆராய்ந்து நிறைவு தேர்தல் அறிக்கை வெளியிடுவதால், அதனை ‘மக்கள் சாசனம்’ என்று பெயரிட்டுள்ளோம்.வரைவு தேர்தல் அறிக்கையில், கருவில் இருந்து கல்லறை வரை ஒரு மனிதனுக்கு என்ன என்ன தேவையோ அவை அனைத்தும் இருக்கிறது. நமது கட்சியினர் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் சிறு சிறு நோட்டீசுகள் மூலமாக மக்களிடம் இதனை கொண்டு செல்ல வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச பொருட்களை தவிர்த்து கல்வியை இலவசமாக்குவோம்.தற்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதாக கேள்விப்படுகிறேன். எனவே வாக்காளர் பட்டியலில் நமது கட்சியினரின் பெயர் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்வதுடன், நமது கட்சியினரின் புதிய வாக்காளர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

9 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. 2015 Mega hit comedy neraya paeru ipadi thangaya kilambaranga ana correcta poi saera matingaranga

  ReplyDelete
 3. Thangalin therthal arikkai nadaymuraikku vandhal indiavil No 1. Nam Tamilagamdhan. Adhe nerathil idhay nadaymuraipaduthuvadal varum Varavu & Selavu (budget) arikkai Neengal kattayam veliyittaga vendum.

  ReplyDelete
 4. நாம் வாங்கும் சம்பளத்தை இரண்டால் வகுத்து தருவார்களோ?விளக்கம் தேவை நண்பா.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி