பி.எட். கலந்தாய்வு செப்.28-ல் தொடங்குகிறது: 16-ம் தேதி முதல் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2015

பி.எட். கலந்தாய்வு செப்.28-ல் தொடங்குகிறது: 16-ம் தேதி முதல் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங் களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும்.


7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், பிஎட் படிப்புக் கான கலந்தாய்வு தேதி அட்ட வணையை தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளரும், சென்னை லேடி வெலிங்டன் கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை பாரதி நேற்று வெளியிட்டார்.அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 முதல் மாலை 5மணி வரையும் நடைபெறும்.சென்னை திருவல்லிக்கேணி யில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத் தில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 16-ம் தேதி முதல் அனுப்பப்படும் என்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு வரையில் அரசு மற்றும் அரசு கல்வியியல் கல்லூரி களில் ஏறத்தாழ2,100 பி.எட். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) கலந் தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வந்தன.இந்த ஆண்டு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய விதிமுறை காரணமாக, கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் பி.எட். இடங்களின் எண்ணிக்கை 1,777 ஆக குறைந்துவிட்டது. எனவே, இந்த ஆண்டு பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி