தேசிய புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டி: அரசு பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2015

தேசிய புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டி: அரசு பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு

டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டிக்கு, விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வுப் போட்டிகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றன.


700 பேர் பங்கேற்பு


மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் கடந்த 5,6-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டிகளில் பங்கேற்றனர்.இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்த 42 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அதில், 3 பேர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.


மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வுக் கண்காட்சியில் திருவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் எஸ். விஸ்வா, திருத்தங்கல் குளோரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் ஆர். வினாயக்.மம்சாபுரம் சிவந்திப்பட்டி நாடார் (பெண்கள்) மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி எம்.சுப்புலட்சுமி ஆகியோர் டெல்லியில் அக்டோபர் 26,27-ம் தேதிகளில் நடைபெறும் தேசிய அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மாணவர் விஸ்வா கூறுகையில், மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற கண்காட்சியில், உலர்ந்த குப்பைகளை எரிக்கும் தானியங்கி கருவியை தயாரித்து அதை காட்சிப்படுத்தியதாகவும், மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியை சோலார் மூலம் இயங்க வைத்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற் கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.மாணவர் ஆர். வினாயக் கூறுகையில், வேகத்தடையிலி ருந்து மின்சாரம் தயாரிக்கும் செயல்முறை குறித்தும் விளக்க வுள்ளதாகத் தெரிவித்தார்.மாணவி சுப்புலட்சுமி தெரிவிக்கையில், பட்டாசுத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் ஒளி-ஒலி மூலம் தொழிலாளர்களுக்கு தெரியப் படுத்தி அவர்களை தற்காத்துக் கொள்ளும் முறை குறித்து கண்காட்சியில் விளக்கவுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி