தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் 63 புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் 63 புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் 63 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் படிப்புகள் வழங்கும் பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி-யின் தொலைதூரக்கல்வி அமைப் பானது ஆண்டுதோறும் அங்கீ காரத்தை புதுப்பிப்பது வழக்கம். அந்தவகையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.பொதுவாக, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தால் அந்த பட்டம் செல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. அது தவறு.10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துவிட்டு பட்டப் படிப்பில் சேர்ந்து படித்தால் அவர்களின் பட்டம் உலகில் எங்கு சென்றாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.எனவே, திறந்தநிலை பல்கலைக்கழக படிப்புகளைக் கண்டு மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த ஆண்டு புதிதாக 63 பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.


அவற்றில் 5 இளங்கலை, 19 முதுகலை பட்டப்படிப்புகள், 40 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் ஆகும்.எங்கள் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 10-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற உள்ளது. இதில் 15 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.இவ்வாறு துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார். பேட்டியின்போது பதிவாளர் எஸ்.விஜயன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி