‛இ-பைலிங்’ மூலம் வருமான வரித் தாக்கல்: 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

‛இ-பைலிங்’ மூலம் வருமான வரித் தாக்கல்: 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.2014-15-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும். எனினும்,


வருமான வரித் தாக்கல் செய்பவர்களின்நலன் கருதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 5 நாட்களுக்கு சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இதில், மாத சம்பளக்காரர்கள், மூத்தக் குடிமக்கள், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் நேரடியாக வந்து தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர்.ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், ரீபண்ட் பெறுபவர்கள் ‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் மட்டுமே வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛ வருமான வரித்தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியான கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ‛ஆன்-லைன்’ மூலம் வரித் தாக்கல் செய்தவர்கள் கணினி சர்வர் பிரச்சினையால் மிகவும் சிரமப்பட்டதாகவும், இதனால் பலர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனதால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி