பி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2015

பி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்!

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் உள்ளன.


மொத்தம் உள்ள, 1,777 இடங்களுக்கு, 7,400 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வரும், 28ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கி, அக்., 5ம் தேதி முடிகிறது.பி.எட்., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள், கல்விக் கட்டணமாக, 2,070 ரூபாய் செலுத்த வேண்டும். தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததி இன மாணவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்கு, ஐந்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.மற்ற கட்டணங்களை, தமிழக உயர்கல்வித் துறையின் உதவித்தொகை மூலம், கல்வி நிறுவனங்களே சரிசெய்து கொள்ளும். தனியார் சுயநிதி கல்லுாரிகளில், இந்தப் படிப்புக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை,கட்டணம் வசூலிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி