நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். அதேநேரத்தில் ‘ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.ஸ்லெட் தேர்வை நடத்துவதற்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங் கப்படும். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கடைசியாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஸ்லெட் தேர்வை நடத்தியது.இந்த நிலையில், 2015 முதல் 2018 வரை 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதமே வழங்கிவிட்டது. ஆனால், அனுமதி கிடைத்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால்,முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Pl publish SET notification soon.....we are waiting that....
ReplyDelete