அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு பூட்டு: நிர்வாகி தலைமறைவு; ஆசிரியர்கள் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2015

அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு பூட்டு: நிர்வாகி தலைமறைவு; ஆசிரியர்கள் தவிப்பு.

திருப்புவனத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்ற பெயரில் அங்கீகாரம் இல்லாத பள்ளி நடத்தி தலைமறைவு ஆனவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விருதுநகரைச் சேர்ந்த திருப்புவனம் புதுாரில் பென்னட், ஏஞ்சலினா தம்பதியினர் தனியார் வாடகை கட்டடத்தில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன் ஹோலிபெல்ஸ் என்ற பெயரில் 'பப்ளிக்' பள்ளி ஒன்றை தொடங்கினர்.


'குறைந்த கட்டணம், பள்ளியிலேயே மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு குறைந்த செலவில் சாப்பாடு, மாலை சிற்றுண்டி, சீருடைவழங்கப்படும்' எனஅறிவிப்பு வெளியிட்டனர்.இந்த பள்ளியில் 170 மாணவ, மாணவியர் சேர்ந்தனர். ஆசிரியர்களுக்கு 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் எனக்கூறி 2 ஆண்கள், 6 பெண்களை நியமித்துள்ளனர்.முதல் மாதம் மட்டுமே சம்பளம் வழங்கிய நிலையில் கடந்த 5 மாதங்களாக வழங்கவில்லை. படிப்புக்கட்டணம் செலுத்தியும், மாணவ, மாணவியர்களுக்குசீருடை, புத்தகம், நோட்டு எதுவும் வழங்கவில்லை. பக்ரீத்விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்படவில்லை.பள்ளியை நடத்தியபென்னட், ஏஞ்சலினாவிடம் கேட்ட போது, ''அக்., 5ல் தான் பள்ளி திறக்கப்படும்,'' எனக் கூறியுள்ளார்.இந்நிலையில் கட்டடத்திற்கு வாடகை கொடுக்காததால் உரிமையாளர் கட்டடத்தை பூட்டியதாக கேள்விப்பட்டவுடன் பெற்றோர், ஆசிரியர்கள் திரண்டு வந்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் தேடிய போது பள்ளி நிர்வாகி பென்னட் தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவி ஏஞ்சலினாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.இது தொடர்பாககல்வித்துறை அதிகாரிகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகனிடம் கேட்ட போது, ''மோசடி குறித்து தற்போது தான் புகார் வந்துள்ளது.விசாரணை செய்கிறோம்,'' என்றார்.


பெற்றோர் சங்கவி கூறுகையில், ''பள்ளி11 மணிக்கு தான் தொடங்குவர். சீருடை,புத்தகம் எதுவுமே கொடுக்கவில்லை. மாதத்தில் 10 நாட்கள் லீவு விடுவார்கள்.தற்போது தான் அங்கீகாரம்பெறவில்லை என தெரியவந்துள்ளது,'' என்றார்.ஆசிரியை விமலா கூறுகையில்,''மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறினர். முதல் மாதம் மட்டும் 5 ஆயிரம் வழங்கினர். 5 மாதமாக சம்பளம் தரவில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி