வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,பெயர், முகவரி திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2015

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,பெயர், முகவரி திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதினெட்டு வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும், விடுபட்டோர் தங்கள் பெயரை பட்டியலில் இணைத்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்யவும், வரும் அக்., மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


அதற்காக பொதுமக்கள் வீணாக அலையாமல், எங்கு செல்ல வேண்டும், என்ன படிவம், என்ன ஆவணங்கள் இணைத்து தர வேண்டும் என்பதையும், தேர்தல் கமிஷன் விளக்கமாக தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...!


மண்டல அலுவலகத்திலும், சிறப்பு முகாம் நடக்கும் நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இலவசமாக 'படிவம் - 6' கிடைக்கும். 18 முதல் 25 வயது உள்ளோர் இந்த படிவத்தை பூர்த்தி செய்து, ஒரு புகைப்படம் ஒட்ட வேண்டும்.பதினெட்டு வயது பூர்த்தியானதற்கான ஆவணம் - பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ்முகவரி சான்றுக்கான ஆவணம் - ஆதார், 'காஸ்' ரசீது பில், ரேஷன் கார்டு மற்றும் இதர ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுஇந்த இரண்டு ஆவணங்களையும், 'படிவம் - 6' உடன் இணைத்து, மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலரிடமோ, சிறப்பு முகாம்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடமோ வழங்க வேண்டும்.உரிய கள ஆய்வுக்கு பின், இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.தங்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை, சம்பந்தப்பட்ட வாக்காளர் ஜனவரி, 11ம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பார்க்கலாம்.மேலும், elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில், ஆவணங்களைபதிவேற்றம் செய்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


பெயர், முகவரிதிருத்தம் செய்ய...!

இதற்கு 'படிவம் - 8' ஐ பூர்த்தி செய்து, பெயர் அல்லது முகவரியில் என்ன திருத்தம் செய்ய வேண்டுமோ, அதற்கான உரிய ஆவணங்களை இணைத்து தர வேண்டும். ஒரே தொகுதியில் ஒரு முகவரியில் இருந்து வேறு முகவரிக்கு இடம் மாறு தலாகும் வாக்காளர், அதற்கு 'படிவம் - 8 ஏ'வை பூர்த்தி செய்து, புதிய முகவரிக்கான ஆவணத்தை இணைத்து தர வேண்டும்.


வாக்காளர் அடையாள அட்டை பெற...!


புதிதாக பட்டியலில் சேரும் வாக்காளர்கள் அனைவருக்கும், ஜனவரி மாத இறுதிக்குள், வண்ண வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும். வாக்காளர் அட்டை வைத்திருந்து தொலைத்தோர், மண்டல அலுவலகங்களில் சென்று, 'படிவம் - 001 ஏ' வை பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதற்கானஆவணத்தையும், 25 ரூபாய் பணமும் செலுத்தினால், 15 தினங்களில், புதிய வண்ணவாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும்.


பெயர் நீக்க செய்ய வேண்டியது என்ன?


ஒரு தொகுதியை விட்டு, வேறு தொகுதிக்கு முகவரி மாற்ற மாகும் வாக்காளர், 'படிவம் - 7' ஐ நிரப்பி தர வேண்டும்.அதனுடன் புதிதாக மாற்றலாகி செல்லும் முகவரிக்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.வாக்காளர் பழைய தொகுதியில் தங்கள் பெயரை நீக்க விண்ணப்பிக்க முன்வராத பட்சத்தில், அரசியல் கட்சியினர், வீட்டு உரிமையாளர் போன்ற விவரம் அறிந்தோர், படிவம் 7ஐ பூர்த்தி செய்து, மண்டல அலுவலகம் மற்றும் ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் அளிக்கலாம்.உரிய கள விசாரணைக்கு பின், பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும்.


நாளை சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில், பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள், நாளையும், அக்.,௪ம் தேதியும், சென்னையில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும்,காலை, 9:3௦ முதல் மாலை, 5:3௦ மணி வரை நடக்க உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி