சென்னை:'ஜவகர் சிறுவர் மன்ற பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும், மாத தொகுப்பூதியம், உயர்த்தி வழங்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி அறிவித்தார்.கலை பண்பாட்டுத் துறை சார்பில், சட்டசபையில் அமைச் சர் வெளியிட்ட அறிவிப்புகள்:● சென்னையில் உள்ள, ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும், பகுதிநேரக் கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
● ஊரக ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும், பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர் தொகுப்பூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
● நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 500 நலிந்த கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம், நிதியுதவி வழங்க, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
● மகாபாரதம், ராமாயணம், பாகவதம் போன்றவற்றில் இருந்து, ஏதேனும் ஒன்றை மையப் பொருளாக வைத்து, 'வர்ண களஞ்சியம்' என்ற தலைப்பில், கலைவிழா நடத்த, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
● தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்ட கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடையவும், அக்கலைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிப்போருக்கு மதிப்பூதியம், பயிற்சி பெறுவோருக்கு நிதியுதவி, பொம்மைகள், தோல் பொம்மைகள், போன்ற கலைப்பொருட்கள் வாங்க, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
● கலைகள் சார்ந்த, தகுதியுள்ள நுால்களை பதிப்பிக்க, நுாலாசிரியர்களுக்கு நிதியுதவி, நுால் ஒன்றுக்கு, 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி