அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லஞ்ச புகார் மையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2015

அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லஞ்ச புகார் மையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க, 'லஞ்ச புகார் மையம்' அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை திருமலாபுரம் டி.கொடிமங்கலத்தைச் சேர்ந்த பி.சடையாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


தமிழகத்தில் தற்போது காவல் நிலையங்களில் அளிக்கப்படும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படாமல் சமரசம் மூலம் முடிக்கப்படுகின்றன. கண் ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தாலும், வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் சமரசம் செய்கின்றனர்.கண்ணுக்கு புலனாகும் குற்ற ங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால், அவற்றை தகுதி அடிப்படையில் விசாரித்து, பொய்யாக புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தாலோ, கண்டுபிடிக்க முடியாமல் போனாலோ வழக்கை முடிக்கலாம் என போலீஸ் நிலையாணையிலும், நீதிமன்ற உத்தரவுகளிலும் கூறப்பட் டுள்ளது. இதனை போலீஸார் பின்பற்றுவதில்லை.மதுரை, விருதுநகர், சிவக ங்கை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்ணுக்கு புலானகும் குற்றங்கள் தொட ர்பான 21,644 புகார்களை வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் முடித்துள்ளனர். அடிதடி புகார்களில் பாதிக்க ப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 23 மாவட்டங்களில் பாதிக்கப் பட்டவர்கள் மீது 5,413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸார், அதை முறையாகச் செய்வதில்லை. பாதிக்க ப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்குவதில்லை. காவல் நிலையங்களில் புகார்கள் பதிவுசெய்யாமல் முடிக்கப்படுவது தொடர்பாக விசாரணை நடத்தி, தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலர், டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.அதேபோல், அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க லஞ்ச புகார் மையம் ஒன்றை ஏற்படுத்தி, இலவச பொது தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தமையத்துக்கு வரும் புகார்களை விசாரித்து, உண்மை இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.


இது தொடர்பாக, உள்துறை செயலருக்கு 9.10.2013-ல் மனு அனுப்பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் மனுதாரரின் கோரிக்கை தெளிவற்றதாக இருப்பதாகக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி