பத்தாம் வகுப்பு அறிவியல் செயல்முறை துணைத்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2015

பத்தாம் வகுப்பு அறிவியல் செயல்முறை துணைத்தேர்வு

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வானது அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் வரும் செப்.,21 முதல் செப்.,23 வரை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் அறிக்கையில்:


ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மீண்டும் எழுத வேண்டும். இத்தேர்வர்கள் கருத்தியல் தேர்வில் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பினும் செய்முறைத் தேர்வு எழுதிய பின்பு கட்டாயமாக மீண்டும் கருத்தியல் தேர்வெழுத வேண்டும்.அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்று ஆனால் செய்முறைத்தேர்வெழுதாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.


நேரடித் தனித்தேர்வர்களை பொறுத்தவரை அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதிய பின்னரே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வு உட்பட ஏனைய பாடங்களில் தேர்வெழுத இயலும் என்பதால், இத்தேர்வர்கள் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றிருப்பின் அவர்களும் மேற் குறிப்பிட்டுள்ள தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய பின்னர் செப்டம்பர்/அக்டோபர் 2015ம் தேர்வெழுதலாம்.


எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2016 தேர்விற்கு அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 2015ல் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்குப் பெயர்களை பதிவு செய்திருப்பர். அத்தகைய தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர் 2015ம் செய்முறை தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.மேலும் செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி