ஆதார் பதிவுக்கு இனி "நோ டென்ஷன்':மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

ஆதார் பதிவுக்கு இனி "நோ டென்ஷன்':மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

டிசம்பருக்குள் முடிக்க ஏதுவாக, ஆதார் பதிவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; முதற்கட்டமாக, விடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஆதார் சிறப்பு முகாம், திருப்பூரில் இன்று துவங்குகிறது.


திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, தாலுகா அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில், நிரந்தர முகாம் அமைக்கப்பட்டு, ஆதார் பதிவு நடக்கிறது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பதிவு செய்துவிட்டு, ஆதார் பதிவு செய்ய, 2016 நவ., வரை, டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகள், அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் தேவை என்பதால், பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் விவரங்களை பதிவு செய்து, உடனுக்குடன் ஆதார் பதிய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதையடுத்து மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்த, கூடுதலாக, 30 "கிட்' பெறப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இன்று முதல் பள்ளி, கல்லூரிகளில் ஆதார் சிறப்பு முகாம் துவங்குகிறது.


திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைக்கிறார்.அதிகாரிகள் கூறுகையில், "மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை, இம்முகாம் நடக்கும். பிரத்யேக படிவம் கொடுத்து, பெயர், முகவரி, பிறந்த தேதி, பெற்றோர் பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி போன்ற விவரங்கள் பெறப்படும். மாணவர்களின் விவரம் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டு, கண் விழிகள், கை ரேகை உள்ளிட்ட உடற்கூறுகள் பதியப்படும். டிச., இறுதியில், ஆதார் பதிவு பணியை முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளதால், இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி