சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2015

சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.


இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆக., 31ம் தேதி கணக்கின்படி, மாணவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், பல மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், திடீர் ஆய்வு நடத்த துவங்கியுள்ளனர்.ஆய்வின் போது, பள்ளி பதிவேடு விவரத்துடன், வகுப்பறையில் இருக்கும்மாணவர் எண்ணிக்கையை ஒப்பிட்டு அறிக்கை தயார் செய்கின்றனர்.

போதுமான மாணவர் எண்ணிக்கையில்லாமல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து விட்டு, பாடம் நடத்தாமல் செல்வது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.இந்த ஆசிரியர்கள் யார்; அவர்களுக்கு மாறுதல் வழங்கப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4 comments:

  1. GOOD MOR FRD WHEN 2010 CV CASE JUDGEMENT TO U KNOW PLEASE ANYBODY SOLUKA NANBARKALAA

    ReplyDelete
  2. திரு. ராம்... ஆதிதிராவிடர் இடைநிலை ஆசிரியர் 30% வழக்கு இன்று வருகிறதா..? தகவல் தெரிவிக்கவும்..

    ReplyDelete
  3. want centum in X Science - visit
    http://samacheersciencequiz.blogspot.in/

    ReplyDelete
  4. சும்மா சம்பளம் வாங்கல? மாணவர் இல்லாமைக்கு யார் பொறுப்பு .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி