மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2015

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான புகைப்படம், கையெழுத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த அனுமதிச் சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வரும் 11-ஆம் தேதிக்குள் அதை தேர்வுப் பிரிவில் தெரிவித்து, குறைகளைச் சரி செய்து கொள்ளலாம். அந்தத் தேதிக்குப் பிறகு விவரங்களைத் திருத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி