விடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2015

விடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதிமுதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


ஆனால், பல இடங்களில் தனியார் பள்ளிகள், சில நாட்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துவிட்டு, வகுப்புகளை துவங்கி விட்டன. இதனால், மாணவ, மாணவியர் குழப்பமடைந்து உள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலம், பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.'அரசு அறிவித்த அட்டவணைப்படி மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும். காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விதிமுறையை மீறி வகுப்பு நடத்தக் கூடாது. மீறும் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புவதுடன், அங்கீகாரம் குறித்துமறுபரிசீலனை செய்யப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிறப்பு வகுப்புக்கு அனுமதி

காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கல்வித் துறை அனுமதிவழங்கியுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளை இந்த ஆண்டு நடத்துகின்றன.

2 comments:

  1. Sriramcoaching centre Animal husbandry Gr-2 book...

    கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி