டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை

டெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம் செய்யக்கூடாது என, மாணவர்களிடம் வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.


வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.வகுப்பறை மற்றும் கழிப்பறையில் தண்ணீர் தேங்கியிருந்தால், தலைமையாசிரிடம் கூறி அகற்ற வேண்டும். குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டியை மூடிவைப்பதன்மூலம், கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும்.டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அதை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். பின்னர் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாறாக, சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.காலை இறைவணக்கத்தின்போது வாரத்தில் 3நாட்கள் அனைத்து மாணவர்களும் இதுகுறித்து சுய உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் சென்னையின் முதன்மைக்கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி