கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2015

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு

சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:


இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு அரசால் அங்கிகாரம் பெற்ற பல்நோக்கு சுகாதார பணியாளர் சான்று பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கிகாரம் பெற்ற செவிலியர், ஆக்சிலரி நர்ஸ், ஹெல்த் விசிட்டர் பட்டய படிப்பு மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் சான்று பெற்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.


இதற்கான வயது வரம்பு அனைத்து வகுப்பினருக்கும் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு உத்தேச பதிவு மூப்பு நாளது தேதி வரையில் பதிவு செய்தவர்கள் தகுதியுடையோர் ஆவார்.எனவே மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் உத்தேச பதிவு மூப்புடையபதிவுதாரர்கள் அனைத்து கல்வி சான்றுகளுடன் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 11-ம் தேதிக்குள் வர வேண்டும். அங்கு தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி