வேளாண் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2015

வேளாண் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.


இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும்இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு, விருப்ப மாறுதலும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, பல போராட்டங்கள் நடந்தன.இந்நிலையில், வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி,விருப்ப மாறுதல் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாதவன் விடுத்துள்ள அறிக்கையில், 'இடமாறுதல் நடத்த உத்தரவிட்ட அரசு, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி