பிஎட் படிப்புக்கான பாடத்திட்டம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2015

பிஎட் படிப்புக்கான பாடத்திட்டம் வெளியீடு

பிஎட், எம்எட் கல்வியியல் பயிற்சி பட்டப்படிப்புகள் இதுவரை ஓராண்டாக இருந்தது. இந்த ஆண்டு முதல், இந்த படிப்புகளை இரண்டாண்டு பட்டப்படிப்புகளாக மாற்றி, மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழகத்தில் சுயநிதி கல்லூரிகள் வழக்குதொடர்ந்தன.


இந்த வழக்கு விசாரணை நவ. 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிஎட் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மேலும், அதற்கான பாடத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.அதில், யோகா உட்பட மூன்று கட்டாயப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.


எஞ்சியுள்ள33 பாடங்களில் தமிழ், ஆங்கிலம், உயிரியல், அமைதி மற்றும் சுற்றுச்சூழல், கணிதம், கணினி அறிவியல், ப்ளே ஸ்கூல் கல்வி போன்ற பாடங்கள்இடம் பெற்றுள்ளன. கணினி அறிவியலில் புதிதாக மூன்று செயலிகள் (ஆப்ஸ்) கண்டுபிடிப்பது செய்முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. செப். 28 முதல் பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வு நடக்க உள்ளது. பிஇ, பிடெக் பட்டம் பெற்றவர்களும், பிஎட் படிப்பில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி