TNPSC தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2015

TNPSC தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு

மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.


இத்தேர்வு எழுத, பி.எஸ்சி., நர்சிங் முடித்து, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.இத்தேர்வுக்காக, 12 ஆயிரத்து, 192 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 43 பேரின் விண்ணப்பங்கள், 'உரிய கல்வித்தகுதி இல்லை' என, நிராகரிக்கப்பட்டன. அத்துடன், 'நர்சிங் கவுன்சிலில் குறிப்பிட்ட பிரிவில் பதியவில்லை' எனக்கூறி, பி.எஸ்சி., நர்சிங் படித்த, 914 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.பாதிக்கப்பட்டவர்கள், நர்சிங் கவுன்சில் மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யை தொடர்பு கொண்டு, தங்கள் பதிவு சரியானது தான் என முறையிட்டனர்.


அறிமுகம்:


இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் விளக்கம் தர, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டது. நர்சிங் கவுன்சில் அளித்த விளக்கத்தில், '914 பேரும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யும் போது, ஒரே வகைப்பதிவு மட்டுமே இருந்தது. சமீபத்தில் தான், மூன்று வகைப்பதிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன' என, கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, நிராகரிக்கப்பட்ட, 914 பேரின் விண்ணப்பங்களையும், டி.என்.பி.எஸ்.சி., மீண்டும்ஏற்றுக்கொண்டது.

3 comments:

  1. 5 சதவீதம் ரத்து வழக்கில் மதுரையில் வெற்றியடைந்த திரு வின்சென்ட் நண்பரே உங்களது நம்பர் எப்படியோ அழிந்து விட்டது.... தற்போது உச்சநீதிமன்ற டி.இ.டி ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் நிலை குறித்து அவசரமாக கலந்து ஆலோசிக்க வேண்டும் .... ஆகவே உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும்

    பி.இராஜலிங்கம் புளியங்குடி
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்
    செல் 95430 79848

    Share to all frnds immediately...

    ReplyDelete
  2. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  3. 2010 CV CASE JUDGEMENT WHEN ANYBODY KNOW......PLEASE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி