TNPSC : நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தேர்வுக்குஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2015

TNPSC : நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தேர்வுக்குஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

நெடுஞ்சாலைத்துறையில் உதவிப்பொறியாளர்கள் காலிப்பணியிடங்கள் 213 உள்ளன. இந்த இடங்களுக்கு சரியான பட்டதாரிகளை தேர்ந்து எடுப்பதற்கான எழுத்துத்தேர்வு6–ந்தேதி நடைபெற உள்ளது.


இந்த தேர்வுக்கு 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளமான www,tnpsc.gov. in ல் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிவெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி