செல்வமகள் திட்டத்தில் 11 வயதுக்குட்பட்டவர்களும் சேரலாம்: தபால் துறை அதிகாரி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2015

செல்வமகள் திட்டத்தில் 11 வயதுக்குட்பட்டவர்களும் சேரலாம்: தபால் துறை அதிகாரி தகவல்

மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11 வயதுக்கு உட்பட்டவர்களும் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என திருவண்ணாமலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கனக சபாபதி தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகம் மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திஉள்ளது. இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கி உள்ளனர். செல்வ மகள் சேமிப்பு கணக்கு மூலமாக அதிக வட்டியுடன் நிறைவான பலன்களைப் பெறலாம்.


ஏற்கனவே இத்திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் அனைத்து அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என அறிவித்திருந்தது. அதன்படி இத்திட்டம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் சிறப்பு சலுகையாக 11 வயதுக்குட்பட்டவர்களும் இதில் சேரலாம் என திருவண்ணாமலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கனக சபாபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆரம்பத்தில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் தான் இத்திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என தலைமை தபால்துறை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இத்திட்டத்தில் சிறப்பு சலுகையாக 11 வயதுக்குட்பட்டவர்களும் சேமிப்பு கணக்கு தொடங்கி பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு சலுகை வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி வரை மட்டும். மேலும் 2015-2016ம் நிதியாண்டில் வட்டி விகிதம் 9.2சதவீதமாக உயர்தப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் இதுவரை கணக்கு தொடங்காமல் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு பயனடையலாம். மேலும் இதுகுறித்ததகவல்கள் தெரிந்து கொள்ள பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி