பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு:18 பேர் மதுரைக்கு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு:18 பேர் மதுரைக்கு மாற்றம்

வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேருக்கு மதுரை மாவட்டத்துக்கு இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.வெளிமாவட்டங்களில் இருந்து மதுரைக்கு பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


தமிழ் 4, ஆங்கிலம் 2, கணிதம் 2,சமூக அறிவியல் 10 என மொத்தம் 18 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.இதற்கு தமிழ் 47, ஆங்கிலம் 54, கணிதம் 55, சமூக அறிவியல் 48 என 204 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். பணி மூப்பு,முன்னுரிமை அடிப்படையில் 18 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி வழங்கினார்.மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி