சம்பளத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம்போராட கருவூல துறையினர் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

சம்பளத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம்போராட கருவூல துறையினர் தயார்

ஊதியத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம் செய்வதை கண்டித்து, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.சென்னையில் அக்., 1 ல் கருவூலத்துறை இயக்குனர் ஆய்வு கூட்டத்தில் மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி இறந்தார்.


இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவூல இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். மனஉளைச்சலால் இறந்த மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் அக்., 6ல் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.மேலும் இப்பிரச்னை குறித்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் பேச கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் பலமுறை முயற்சித்தும் பலனில்லை. பிரச்னைக்கு தீர்வுகிடைக்காவிட்டால் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இறந்த மூர்த்தியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மற்றகோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் அக்., 31ல் திருச்சியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.


சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நிவாரணம் வழங்கியதற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். அக்.,6 ல் தற்செயல் விடுப்பு போராட்டம் எடுத்த 3 ஆயிரம் பேரின் ஒரு நாள் ஊதியம் ரூ.20 லட்சம் வரை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கோரிக்கையான இயக்குனரை மாற்றுவது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மீண்டும் போராட்டம்நடத்துவதை தவிர வேறுவழியில்லை, என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி