அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2015

அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுத்துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணிக்கு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் கணினிசான்றிதழ் தேர்வு (கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப் பிக்கும்போது கணினி தகுதி தேர்ச்சி பெறாவிட்டாலும் பணி கிடைத்தால் தகுதிகாண் பருவத்துக்கு முன்பாக கண்டிப்பாக கணினி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிற அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவம்பர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி