32 அரசு கல்லூரியில் முதல்வர் பணி காலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2015

32 அரசு கல்லூரியில் முதல்வர் பணி காலி.

தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர்பணியிடங்கள் காலியாக இருப்பதால், அங்கு முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.மாணவர்களின் கல்விப்பணி பாதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும்புதிதாக துவங்கிய 12 கல்லுாரிகள் உட்பட 70க்கும் மேற்பட்ட அரசு கல்லுாரிகள் செயல்படுகின்றன.


இவற்றில் 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்விடங்களில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு முதல்வர்களால் வளர்ச்சி பணிக்கான திட்டங்களுக்கு முக்கிய முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான கல்லுாரிகளில் ஆய்வகம், கூடுதல் வகுப்பறை இன்றி, மரத்தடியை வகுப்பறைகளாக மாற்றும் சூழல் உள்ளது. நிதி ஒதுக்கீடு இன்றி ஆய்வக செயல்பாடு, நுாலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். பொறுப்பு முதல்வர்கள் நிர்வாகபணிகளை கவனிப்பதால், அவர்கள் சார்ந்த வகுப்புக்களை எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு போன்ற சில கோப்புகளில் கையெழுத்திட தயங்குகின்றனர். கல்லுாரி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கிரேடு 1 அந்தஸ்து பெற்ற 10 கல்லுாரிகளிலும், கிரேடு 2வில் 22 கல்லுாரிகளிலும் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்கல்லுாரிகளில் நிரந்தர முதல்வர்களை நியமிக்க வேண்டும். கிரேடு 2வில் இருந்து 1க்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும். இதன் பின், கிரேடு 2 காலி இடம் உட்பட அனைத்து காலியிடங்களுக்கும் நிரந்தர முதல்வர்களை நியமிக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி