போனஸ் 'ஸ்டிரைக்' அறிவிப்பு '108' ஊழியர் 40 பேர் 'டிஸ்மிஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2015

போனஸ் 'ஸ்டிரைக்' அறிவிப்பு '108' ஊழியர் 40 பேர் 'டிஸ்மிஸ்'

தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், ஜி.வி.கே., நிறுவனம், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துகிறது; இதில், 3,500 ஊழியர்கள் உள்ளனர். தீபாவளிக்கு, 20 சதவீத போனஸ் தர, நிர்வாகம் மறுத்ததால், நவ., 8 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், ஊழியர்கள், 40 பேருக்கு, ஜி.வி.கே., நிறுவனம், 'டிஸ்மிஸ்' நோட்டீஸ் அளித்துள்ளது. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் நேற்று, தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.இதுகுறித்து, தொழிலாளர் சங்க செயலர் பால்கண்ணன் கூறுகையில், ''ஸ்டிரைக் அறிவித்துள்ளதால், பழி வாங்க, 40 பேருக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, தொழிலாளர் நலத்துறையில் புகார் செய்துள்ளோம். விசாரணை, நவ., 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதை மறுத்த, ஜி.வி.கே., நிர்வாகிகள், 'விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி