சென்னையில் 41 ஆண்டுகளுக்குப் பின் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் தங்கி, அரசுப் பணிகளை கவனித்து வரும் முதல்வர் ஜெயலலிதா, நேற்று அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலம், சென்னையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 29-ம் தேதி அறிவித்தார்.இதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார்ப்பேட்டையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளியில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த 2015-16 கல்வியாண்டு முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த கல்லூரிக்கு ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்குதல்,மரத்தளவாடங்கள், புத்தகங்கள், கணினி வாங்குவதற்கும், புதிய கட்டிடம் கட்டவும் ரூ.8 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 800 நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.தொடர்ந்து, நேற்று தண்டையார் பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, 5 மாணவ, மாணவியருக்கு கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தையும் வழங்கினார்.அப்போது, மாணவர்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஜெயலலிதா,‘‘ நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும். ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்’’ என்றார்.நிகழ்ச்சியில் உயர்கல்வி அமைச்சர் பி.பழனியப்பன், தலைமைச் செயலர் கு. ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வி செயலர் அபூர்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தற்போது முதல்வர் ஜெய லலிதாவால் சென்னை தண்டை யார்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரி, சென்னையில் 41 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார்பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலிக் காட்சி மூலம் கோடநாடு முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி