வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு அபாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2015

வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு அபாயம்

வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் அரசு விடுமுறை நாட்களால் 2 அல்லது3 நாட்கள் வரை தொடர்ச்சியாக மூடப்படும் நிலை இருந்துள்ளது.ஆனால் முதல் முறையாகஅடுத்த வாரத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் மூடப்படுகின்றன.


வருகிற 21–ந்தேதி ஆயுதபூஜை விடுமுறை நாளாகும். மறுநாள் 22–ந்தேதி விஜயதசமியும் விடுமுறையாகும்.23–ந்தேதி மொகரம் பண்டிகை விடுமுறையாகும். அதனைத்தொடர்ந்து 24–ந்தேதி மாதத்தின் இறுதி சனிக்கிழமை விடுமுறை நாளாகும். 25–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமான விடுமுறை நாளாகும்.இப்படி 5 நாட்கள் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுபோன்ற நிகழ்வு மிக நீண்ட காலத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு கிடைத்து இருப்பதால் இந்த விடுமுறையை அனைவரும் திட்டமிட்டு பயன்படுத்த பல நாட்களுக்கு முன்பே முடிவு செய்திருப்பார்கள்.


மற்ற துறைகளை பார்க்கிலும் வங்கித்துறையின் பணி நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சியை சார்ந்துள்ளது. சாமான்ய மக்கள் முதல் பல்வேறு தொழில்களை செய்து வரும் தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தொழில் சார்ந்த பண பரிவர்த்தனை மற்றும்காசோலை பரிமாற்றம், நடவடிக்கைகள் வங்கிகளோடு மட்டுமே இணைந்தவையாகும்.5 நாட்கள்வங்கிகள் மூடப்படுவதால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கக்கூடும். குறிப்பாக காசோலை பரிவர்த்தனை, டெபாசிட், அந்நிய செலாவணி, வங்கி வரைவோலை (டி.டி) எடுத்தல் உள்ளிட்ட பல பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்.ஆனால் பொதுமக்கள் பணம் எடுப்பதற்குவசதியாக அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல்பட வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்படும் பணம் ஒன்று அல்லது 2 நாட்கள் மட்டுமே பொது மக்கள் பயன்பாட்டிற்கு போதுமானதாக உள்ளது. ஒரு சில மையங்களில் பணம் நிரப்பப்பட்ட மறுநாளே தீர்ந்து விடுவதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தேவைக்கு ஏ.டி.எம். மையம் ஒன்றை மட்டுமே நாடவேண்டிய நிலை உள்ளதால் பணம் தட்டுப்பாடு இல்லாமல் ஏ.டி.எம். மையம் செயல்பட வேண்டும்.ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் விடுமுறை நாட்களில் முழுமையாக செயல்பட வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் ஏ.டி.எம். மையங்களில் தேவையான அளவு பணம் இருப்பு வைக்க வேண்டும். எல்லா ஏ.டி.எம். மையங்களும் முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.பணம் இல்லாத பல ஏ.டி.எம். மூடப்படும் நிலை உருவாகாமல் இருந்தால் மட்டுமே விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் சேவை முழுமைபெற்றதாக அமையும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை வங்கி உயர்அதிகாரிகள் திட்டமிட்டு எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.


இதுகுறித்து அனைத்து வங்கிகள் கூட்டமைப்பு தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:–வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வர இருக்கிறது. வங்கி ஊழியர்கள் பணிக்கு வரமாட்டார்கள். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. இதற்கு தகுந்த நடவடிக்கைகளை வங்கி நிர்வாகம் எடுக்க வேண்டும். பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். பணம் காலியான ஏ.டி.எம். மையங்களில் உடனே நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி