65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2015

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், பட்டதாரிகள்,விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்றும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. தமிழ்நாட்டில் எப்போதும் பயிற்சி தான் நடக்குது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற ஆள் இல்லை. 8 ம் தேதிக்கு முன்னாடியே ஏதாவது சொல்லி தொலைச்சாவது நல்லாயிருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி