காலாண்டு தேர்வு முடிவு விவரம் அனுப்ப உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2015

காலாண்டு தேர்வு முடிவு விவரம் அனுப்ப உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரத்தைசேகரித்து அனுப்புமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடந்து முடிந்துள்ளது; விடுமுறைக்குபின், பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.மூன்று ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளிகளும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பதில், பள்ளி கல்வித்துறை தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதனால், காலாண்டு தேர்வு வினாத்தாள் திருத்தி முடிக்கப்பட்டு, தேர்ச்சி விவரங்களை பட்டியலிட்டு, உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வுகளில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண் விவரம், காலாண்டு தேர்வில் மதிப்பெண் பெற்ற விவரம், இரண்டு தேர்வுக்கும் இடையே மதிப்பெண் வித்தியாசம், தேர்ச்சி சதவீத ஏற்றம் அல்லது சரிவு போன்ற தகவல்களை, முழு விவரங்களாக பட்டியலிட்டு, பள்ளி கல்வித்துறைக்கு, மாவட்டம் வாரியாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டந்தோறும், 'நோடல் ஆபிஸராக' நியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குனர்கள், தேர்ச்சி சதவீதத்தில் பின்னடைவை சந்தித்துள்ள பள்ளிகளில், நேரடி ஆய்வு நடத்தவும், அடுத்த தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கவும், திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி