வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தியாகிறவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


அதுமட்டும் அல்லாமல், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்க தவறியவர்களும் பெயர் சேர்த்துக்கொள்வதுடன்,பெயர் நீக்கம், பெயர் திருத்தம், இடம் மாறுதல் போன்றவற்றையும் செய்து கொள்ள இம்மாதம் 24-ந் தேதி (இன்று) வரை அலுவலக நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மீறீமீநீ௴வீஷீஸீ௳.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ/மீக்ஷீமீரீவீ௳௴க்ஷீணீ௴வீஷீஸீஎன்ற இணையதளம் மூலமும் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய கூடுதல் வசதி செய்யப்பட்டிருந்தது.


21 லட்சம் பேர் விண்ணப்பம்


இந்த நிலையில், வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக, கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந் தேதியும், இம்மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர். தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்கள் ஆவார்கள். 3 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்டு விண்ணப்பித்துள்ளனர்.


புதிய வாக்காளர் பட்டியல

்இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான காலக்கெடு இன்று (சனிக்கிழமை) மாலையுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று முகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால், வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் சென்று விண்ணப்பம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆன்-லைன் மூலம் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். இனி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்துள்ள சுமார் 21 லட்சம் பேரின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள். இந்த பணிகள் முடிந்தவுடன் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். புதிய வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25-ந் தேதி, தேசியவாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வருகிற ஜனவரி மாதம் வெளியிடப்படும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி