அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2015

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா?

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர். இவ்வாறு கூடுதலாக கவனிப்பதால் பிளஸ் 2பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டன. இதனால் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் பிளஸ்2 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனால் ஏற்படும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும்.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாவது பொது கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.ஏற்கெனவே, கலந்தாய்வு மூன்று மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்ட நிலையில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆள் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியையும் கவனிக்க முடியாமலும், பாடத்தை முழு ஈடுபாட்டுடன் மாணவர்களுக்கு கற்பிக்கமுடியாமலும் திணறுகின்றனர.

6 comments:

  1. Bt councelling vacauncy detail therinjavanga. Sollunga frnds

    ReplyDelete
  2. I need ur help kalviseithi admin bt councilling vacauncy details

    ReplyDelete
  3. I need ur help kalviseithi admin bt councilling vacauncy details

    ReplyDelete
  4. I need ur help kalviseithi admin bt councilling vacauncy details

    ReplyDelete
  5. Bt councelling vacauncy detail therinjavanga. Sollunga frnds

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி