காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு:

அரசு பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.


பருவ பாடப்புத்தகங்கள்


தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலையில்லா பொருட்கள் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, பள்ளிக்கல்விஇயக்குனர் ச.கண்ணப்பன் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 3 பருவங்களாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2-வது பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3-வது பருவ புத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.


புத்தக பையின் சுமையை குறைக்க...


மாணவ-மாணவிகள் பள்ளிக்கு எடுத்து வரும் புத்தக பையின் சுமையை குறைக்கும் நோக்கோடு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பருவ பாடப்புத்தங்கள் உடன் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள், சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு பாடநூல் சேவை கழகம் சார்பில், அதன் மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் கார்மேகம் ஆகியோர் அச்சிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான 2-ம் பருவ பாடப்புத்தகங்களை தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள குடோன்களுக்கு அனுப்பிவைத்தனர்.


பள்ளிகள் திறப்பு


பின்னர் அங்கிருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்களை ஆசிரியர்கள் எடுத்துச்சென்றனர். தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி காலாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து சென்னையில் நேற்று காலையில் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டன.

2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம


்சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சென்னையில்உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டன.6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய மற்றொரு புத்தகம்என 2 புத்தகங்கள் வழங்கப்பட்டன.


மாணவ-மாணவிகள் ஆர்வம்


9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம், தமிழ் பாடங்களை உள்ளடக்கிய புத்தகம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய புத்தகம் மற்றும் கணித பாடத்தை உள்ளடக்கிய புத்தகம் என3 புத்தகங்கள் வழங்கப்பட்டன.அந்த புத்தகங்களை கொண்டு முதல் நாளான நேற்றே ஆசிரியர்கள் பாடங்களைநடத்தினர். மாணவ-மாணவிகளும் புது பாடத்திட்டங்களை ஆர்வத்துடன் படித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி