சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: சிங்காரவேலர் கமிட்டி எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2015

சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: சிங்காரவேலர் கமிட்டி எச்சரிக்கை

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்தால், அதுதண்டனைக்குரிய குற்றம் என்று, சிங்காரவேலர் கமிட்டி எச்சரித்துள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உடுமலை சாலையிலுள்ள தனியார் மெட்ரிகுலேஷன்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு ரூ.10,300 கல்விக் கட்டணமாக நிர்ணயித்துள்ளது.


ஆனால், பள்ளி நிர்வாகம் கூடுதலாக ரூ.10 ஆயிரம் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர், சிறப்பு வகுப்புகளுக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த மறுத்துள்ளனர். மேலும், அப்பள்ளிக்கான கட்டண விவரத்தை அறிய, அரசு நியமித்த சிங்காரவேலர் கமிட்டிக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக விண்ணப்பித்தனர். இதில் அப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அதை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம், சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாகக் கூறி கூடுதல் கட்டணம் கேட்டு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து சிறப்பு வகுப்புகளுக்கான அனுமதி மற்றும் கட்டண விவரங்கள் குறித்து சிங்காரவேலர் கமிட்டிக்கு பெற்றோர் மீண்டும் மனு அளித்துள்ளனர்.மாணவரின் தந்தை ராமகிருஷ்ணன் கூறும்போது, “அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட ரூ.10 ஆயிரம் வரை சிறப்பு வகுப்புகளுக்கு வசூலிக்கிறார்கள்.


எனவே சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி உள்ளதா? அந்த வகுப்புகளுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கானகூட்டமைப்பின் உதவியுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கேள்வி எழுப்பினோம்.சிங்காரவேலர் கமிட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுதனி அலுவலர் த.மனோகரன் கூறும்போது, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைத் தவிர,தனியார் பள்ளிகள் எந்த வகையிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அப்படிவசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி