கலாம் வழியில் மாணவர்களை அரவணைக்கும் அறிவியல் ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2015

கலாம் வழியில் மாணவர்களை அரவணைக்கும் அறிவியல் ஆசிரியர்

பள்ளி அறிவியல் ஆய்வகத்தில் மாணவர்களுடன் ஆசிரியர் செங்குட்டுவன்.
வயல்வெளியில் ஆய்வு.


அரியலூர் மாவட்டத்தில் கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியரான செங்குட்டு வன் என்பவர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பாணியில் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.ஜெயங்கொண்டம் அருகே உள் ளது தேவாமங்கலம் கிராமம். இங் குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் இலா.செங்குட்டு வன். அரசுப் பள்ளிகள் குறித்தும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்தும் வெகுஜனங்கள் மத்தி யில் நிலவும் தவறான எண் ணத்தை உடைத்தெறியும் ஆசிரியர் களில் செங்குட்டுவனும் ஒருவர்.கிராமத்து பள்ளியில் ஆசிரிய ராகப் பணியாற்ற வேண்டுமென்ற செங்குட்டுவனின் சிறுவயது கனவு, சற்று தாமதமாகவே ஈடேறியது.


தேவாமங்கலத்தில் பட்டதாரி ஆசிரியராக அவர் பொறுப்பேற்றதும், அந்தக் கனவுக்கு செயலாக்கம் தர ஆரம்பித்தார். அப்துல்கலாமின் கருத்தும், பேச்சும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெறத்தொடங் கிய அச்சமயத்தில், சகலத்துக்கும் கலாமை வரிந்துகொண்டு மாணவர் களை வசீகரிக்க ஆரம்பித்தார் செங்குட்டுவன்.பசுமைப்படை ஒருங்கிணைப் பாளராகப் பள்ளி வளாகத்தைச் சோலையாக மாற்றியுள்ளார். உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கிடைக்கும் அறிவியல் ஆய்வகத்தை தனது நடுநிலைப் பள்ளியில் சாத்தியமாக்கியுள்ளார் இவர்.சொந்த செலவில் வாங்கிய டிவிடிக்கள் மூலம் வெண்சுவரை திரையாக்கி தனியாருக்கு இணை யாக ‘ஸ்மார்ட் கிளாஸ்’ நடத்துகிறார். பாடம் அறிவியல்தான் என்றாலும், பாட்டு இன்றி அவரது வகுப்பறை நடக்காது.புத்தாக்க அறிவியல் கண்காட்சி களில் மாநில முதலிடம் பெற்ற மாணவர்கள் உண்டு. தேசிய அறி வியல் குழந்தைகள் மாநாட்டுக்கு இவரது வழிகாட்டலில் கிராமத்து குழந்தைகள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கிறார்கள்.


கடந்தாண்டு 5 மாணவர்கள் மத் திய அரசின் ‘குழந்தை விஞ்ஞானி’ பட்டம் பெற்றுத் திரும்பினார்கள். “அப்படியொரு விருதுக்காக டெல்லி சென்றபோது, கலாமை மாணவர்களுடன் சந்தித்தேன். ‘தனித்துவ ஆசிரியர்களால் மட்டுமே தனித்துவ மாணவர்களை உரு வாக்க முடியும்’ என்று அவர் சொன் னது வேதவாக்காக என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்று நெகிழ்கிறார் செங்குட்டுவன்.பள்ளியில் தன்னார்வத்துடன் பல பொறுப்புகளை வரிந்து கொள் வதால் இவருக்கு விடுமுறைகள் வாய்ப்பதில்லை. ‘‘10 வருட அர சாங்க உத்தியோகத்தில் ஒரு வீடு கூட கட்டலையா..? என்று உறவினர்கள் கேலி செய்கிறார்கள். இந்த நாட்டைத் தாங்கப்போகும் தூண்களை உருவாக்கும் பணி யில் சொந்த வீடு கட்டுவதுதள்ளிப் போவதில் தவறில்லையே?” என்று கேட்கிறார் செங்குட்டுவன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி