காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:


தமிழக அரசின் ஆணையோ, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்களின் வருகைப் பதிவை பதிவு செய்ய நடைமுறைப்படுத்தும் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்யவேண்டும்; கடந்த ஆகஸ்ட் 2015இல் நடைபெற்ற தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்கள் மறைக்கப்பட்டிருந்தன. ஆனால், இதுவரை அந்தக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால்பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடம் போதிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, விடுபட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டும்; குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடிமாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு 2ஆவது பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (அக்.19) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி