தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பட்டய சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2015

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பட்டய சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, உதவியாளர் சான்றிதழ்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.இது குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.கதிர்காமு கூறியதாவது:


2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, ஆண்- பெண் செவிலியர் உதவியாளர் சான்றிதழ் படிப்பு, விழிப்பார்வை தேர்வாய்வு பட்டயப் படிப்பு, மருத்துவ பதிவேடு, அறிவியல் படிப்பு ஆகியவைகளுக்கான விண்ணப்பங்களை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை பெற செயலர், தேர்வுக்குழு சென்னை என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.250க்கான வரைவோலை எடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ( ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்கள் தவிர) பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களின் சான்றொப்பமிடப்பட்ட சாதி சான்றிதழ்கள் 2 நகல்களைக் கொண்டு வந்து கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி