வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:சென்னை ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு தமிழக அரசு, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக உதவித்தொகை வழங்கி வருகிறது. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, பட்டப் படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதி களை வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவுசெய்து 5 ஆண்டு களுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை அணுக வேண்டும்.


எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடர்புகொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 45 வயது), தனியார் அல்லது சுயவேலை வாய்ப்பில் ஈடுபடாமல் இருப்ப வராகவும், குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.50 ஆயிரத்துக்குமிகாமலும் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரையில், பதிவுசெய்து ஓராண்டு ஆகியிருந்தால் போது மானது. அவர்கள் கிண்டி மகளிர் ஐடிஐ வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ஏதுமில்லை.ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளில் விண்ணப்பித்து ஓராண்டு முடிவுபெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண்,உதவித்தொகை எண் (எம்ஆர் நம்பர்) ஆகிய விவரங்களுடன் நவம்பர் 30-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி