புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி

சென்னை, அக். 9–தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், அனைத்து இணைப்பு சங்க தலைவர்கள் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது.மாநில தலைவர் கே.கணேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.சண்முகம் வரவேற்றார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கே.கணேசன் கூறியதாவது:–


சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலத் திட்டங்களை முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். இவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் அரசு பணியாளர்களுக்கு இருக்கின்ற காரணத்தால் வருகிற 12–ந்தேதி நடக்க இருந்த சிறை நிரப்பும் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.அதற்கு மாறாக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு எங்களது சங்கத்தை அழைத்து பேசா விட்டால் நவம்பர் மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.அடுத்த கட்டமாக டிசம்பர் மாதத்தில் மாநில தழுவிய அளவில் சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி கோட்டை நோக்கி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


12,524 ஊராட்சிகளில் பணிபுரியும் பம்ப் ஆப்ரேட்டர், அடிஷனல் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு கால முறை ஊதியம், ஓய்வூதியம், கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட சுமார் 2400–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து பழைய பென்சன் முறையினை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாநில பொருளாளர் ஜி.கோதண்டபாணி, நிர்வாகிகள் ராஜா, சுப்பிரமணியன், சீனிவாசன், எஸ்.மதுரம், தமிழ்மணி, பாலசந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி