புது வாக்காளர் அட்டை தேர்தல் அதிகாரி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2015

புது வாக்காளர் அட்டை தேர்தல் அதிகாரி தகவல்

''ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், புதிய அட்டை பெற விரும்பினால், அதற்கு, 001 என்ற தனி படிவம் அளிக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் நேற்று அளித் பேட்டியில்:


வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், , 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. பெயர் சேர்க்க கோரியவர்களுக்கு, முதல் முறையாக, வண்ண அடையாள அட்டை இலவ சமாக வழங்கப்படும்.ஆனால், ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்து, முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்தவர்கள், புதிய அட்டை பெற, 001 படிவம் அளிக்க வேண்டும்; அத்துடன், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.அதை, 'ஆன்லைன்' மூலமாகவும் வழங்கலாம். இப்போது, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்யக் கோரி வந்த விண்ணப்பங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம், உடனுக்குடன் சம்பந்தப்பட்டவருக்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சந்தீப்சக்சேனா கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி