நேரடி பணி நியமனத்தில் குளறுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2015

நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன.நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடத்தி பணியாளர்களைநியமிக்கின்றனர்.இதில், 'வேலைவாய்ப்பக பதிவுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது. 'இதை துறை அலுவலர்கள் முறையாக பின்பற்றுவதில்லை' என வேலைவாய்ப்புத்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் கணேசமூர்த்தி கூறியதாவது: எங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் பெறப்பட்டாலும், முறையாக பணிநியமனம் செய்வதில்லை. இனசுழற்சி முறையும் பின்பற்றுவதில்லை. இதேநிலை நீடித்தால் இளைஞர்களிடையே, வேலைவாய்ப்பு அலுவலகம் குறித்த நம்பிக்கை போய்விடும்.இதை கண்டித்து அக்., 28ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து சென்னையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி