சிறப்பு விருந்தினர்களை வரவேற்க மாணவ, மாணவிகளை ஈடுபடுத்த தடை: உயர் நீதிமன்றத்தில் சுற்றறிக்கை தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2015

சிறப்பு விருந்தினர்களை வரவேற்க மாணவ, மாணவிகளை ஈடுபடுத்த தடை: உயர் நீதிமன்றத்தில் சுற்றறிக்கை தாக்கல்

சிறப்பு விருந்தினர்களை வரவேற் கும் நிகழ்ச்சிகளில் தொடக்க நிலை மாணவ, மாணவியரை ஈடுபடுத்த தடை விதித்தும், மற்ற நிலை மாணவ, மாணவிகளை ஈடு படுத்த கட்டுப்பாடு விதித் தும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்ப தாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் பதவி வகித்தபோது, அவரது நியமனம் செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்யாணி மதிவாணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். அந்த வழக்கில் கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை வரிசையில் நிறுத்தி, மலர்களைத் தூவி கல்யாணி மதிவாணனை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த சம்பவத்தையடுத்து முக்கிய நபர்கள் வரவேற்பின்போது மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரி விஜயகுமார் என்பவர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, சுயநிதி பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.இதையடுத்து இந்த சுற்றறிக் கையை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி