அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2015

அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.மாநில செயலர் பிரேம்குமார், மாவட்டத் தலைவர் நாகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தை பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 2 ஆம் இடத்தையும், எஸ்.எஸ்.எல்.சியில் மாநிலத்தில் 4 ஆம் இடத்தையும் பெறச்செய்ததோடு, மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக தேர்ச்சி விழுக்காட்டில் பெரம்பலூர் மாவட்டத்தைக் கொண்டுவர பல்வேறு ஆலோசனைகளை வழங்கும் ஆட்சியர் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அலுவலர்களை சங்கத்தின் சார்பில் பாராட்டுவது. போலி சங்கங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.


ஆசிரியர்கள் சங்க கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அச்சுறுத்தல் ஏற்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்டத்தலைவர் வேலு, மாவட்ட அமைப்பாளர் கு. தேசிங்குராஜன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில அமைப்பாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி