'சிவில் சர்வீசஸ்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2015

'சிவில் சர்வீசஸ்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், மூன்று கட்ட 'சிவில் சர்வீசஸ்' தேர்வு நடத்தப்படுகிறது.ஆகஸ்டில் நடந்த முதல்நிலை தகுதித் தேர்வு முடிவுகள், கடந்த வாரம்வெளியாகின.


இதில், 4.60 லட்சம் பேர் எழுதியதில், தமிழகத்தை சேர்ந்த, 500 பேர் உட்பட, 15 ஆயிரம் பேர், முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு டிச., 8ல் தேர்வு நடக்கிறது. தேர்வு அட்டவணை, அடுத்த வாரம் வெளியாகலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம், ஒன்பது தாள்களுக்கு, 2,625 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.மாநில மொழி, ஆங்கிலம் என, இரண்டு தாள்களில், ஒவ்வொரு தாளுக்கும் தலா, 300 மதிப்பெண் வழங்கப்படும். இதில், குறைந்தது, 25 சதவீத மதிப்பெண் கட்டாயம். மாநில மொழியில் தமிழ் உட்பட, 13 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.மற்ற ஏழு தாள்களில், கட்டுரை, பொதுப் பாடம், 4 தாள்கள்; தேர்வுப் பாடங்கள் இரண்டு, தலா 250 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும். இதுதவிர பெர்சனாலிட்டி தேர்வுக்கு, தனியாக, 275 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இரண்டு சிறப்புப் பாடங்கள் எழுத வேண்டும்; அதற்கு, 26 பாடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்திய வரலாறு, கலாசாரம், சர்வதேச மற்றும்சமூக வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை முதல் பொதுப்பாடம்; நிர்வாகம், அரசியல் அமைப்பு, சமூக நீதி மற்றும் சர்வதேச தொடர்புகள் இரண்டாவது பொதுப் பாடம்.தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை, 3வது பாடம்; மனித ஒழுக்கம், அரசியல் எண்ணங்கள், சமூக ஒற்றுமை, வாழ்வியல் நெறிகள் போன்றவை நான்காவது பாடமாகவும் வெளியிடப்பட்டு உள்ளது.


பாடத்திட்டத்தை, http://www.upsc.gov.in/exams/notifications/2015/CSP_2015/CSP_2015_eng.pdf என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி