புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2015

புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமைப்படுத்தும் விதமாக மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் புதுவை மத்திய பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.


இதற்காக புதுவை அரசு அனைத்துக் கொம்யூன்களிலும், நகராட்சியிலும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது.இதன் அடுத்த கட்டமாக மாநில அளவிலான கருத்துக் கேட்பு கலந்தாய்வுக் கூட்டம் கல்வியாளர்களைக் கொண்டு, பல்கலைக் கழக துணைவேந்தர் (பொ) அனிஷா பி கான் தலைமை வகிக்கிறார்.இதில் கல்வித்துறைச் செயலர் ராகேஷ் சந்திரா, பள்ளிக் கல்வி இயக்குனர் குமார், அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாநிலப்பயிற்சி மைய விரிவுரையாளர்கள், அனைவருக்கும் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.

2 comments:

  1. Permanent subject to give computer science 1 to 10th standard

    ReplyDelete
  2. Permanent subject to give computer science 1 to 10th standard

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி