TNPSC: 1863 காலியிடங்கள் நிரப்ப நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2015

TNPSC: 1863 காலியிடங்கள் நிரப்ப நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை,காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர், பெர்சனல் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 1862 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான குரூப் 2 ஏ தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் உள்ளதுபோல் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என்ற மூன்று கட்டத் தேர்வு முறை இதற்கு கிடையாது. ஒரே ஒரு எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, இளநிலை பட்டப் படிப்பை படித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். இந்தப் பணிகளில் 20 சதவீதப் பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.நிதித்துறையில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் லோயர், ஹையர் என இரு நிலைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சட்டம் மற்றும் நிதித்துறை அல்லாத பிற துறைகள், டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சட்டப்பேரவை போன்றவற்றில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் லோயர், ஹையர் என இரு நிலைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வருவாய்த்துறை ஆணையாளர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில்பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ, சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஎம் படித்தவர்களும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.லிட். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, தொழிலாளர் துறை, நெடுஞ்சாலைத் துறை, வரலாற்று ஆவணத்துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அனைத்துப்பணிகளுக்கும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் அல்லாத பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பின், அவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. வேறு அரசு நிறுவனங்களில் பணி அமர்த்தப்படாத நிலையில் டான்சி நிறுவனத்தில் ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் ஊழியர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு எப்படி இருக்கும்?

இதற்கான எழுத்துத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு ஜெனரல் ஸ்டடீஸ் ஆகும். இதில் பட்டப்படிப்புத் தரத்தில், ஜெனரல் ஸ்டடிஸ் பிரிவில் 75 கேள்விகள், எஸ்எஸ்எல்சி தரத்தில் மென்டல் எபிலிட்டி பிரிவில் 25 கேள்விகள் எனமொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.ஜெனரல் ஸ்டடிஸில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். டேட்டா கலெக்ஷன், டேட்டா டேபிள்ஸ், கிராப்ஸ், அனலிட்டிக்கல் இட்னர்பிரட்டேஷன் டேட்டா, சிம்ப்ளிபிக்கேஷன், சதவீதம், நேரம், தூரம், ரீச னிங், வரைபடம் உள்பட பல்வேறு மென்டல் எபிலிட்டி பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.இரண்டாவது பிரிவு எஸ்எஸ்எல்சி தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகும். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும்.தமிழ்ப் பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள், அவர்களின் தமிழ்த் தொண்டு ஆகிய பாடப்பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள்.நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. கேள்விகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிழற்படம், கையெழுத்து ஆகியவற்றை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டும். இ மெயில்முகவரி, தொடர்பு கொள்ள மொபைல் எண்ணும் அவசியம். இப்பணிகளுக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் 125 (அதாவது தேர்வுக் கட்டணம் ரூ.75, விண்ணப்பக் கட்டணம் ரூ.50). ஒரு முறை பதிவு முறையில் ஏற்கனவே, ரூ. 50 செலுத்தி, விண்ணப்பித்து பதிவு எண் பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். ஆப்லைன் முறையில் என்றால் இந்தியன் வங்கி அல்லது ஏதேனும் ஒரு தலைமை தபால் நிலையம் மூலமாக கட்டணம் செலுத்தலாம்.ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தப் பிறகு, அந்த ஃபைலை ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிரிண்ட் அவுட்டையோ, அதன் நகல்களையோ எதையும் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வு நடைபெற இருப்பதற்கு, ஒருவாரம் முன்னதாக இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தகுதிகள் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்தும் முறை குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2015, இரவு 11.59வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015 .

37 comments:

  1. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பித்து விட்டீர்களா வணிகத்தை? 6 முதல் 12 ம் வகுப்பு State Board Standard Equitable Education books + CBSE (NCERT) Books from Standard 6 to 12th more than enough. Monthly Competition Success needed. Apart from these nothing needed.

      Delete
    2. IF ANYONE KNOWS NET AND SET ASSOCIATION, GIVE ME THE CONTACT ADDRESS

      Delete


    3. this case when finish?

      ramar &sudalai nanbarkale eppo than casea mudippinga?


      Madras High Court - Madurai Bench

      Case Status Information System

      Case Status : Pending

      Status Of : WRIT PETITION(MD) 16547 Of 2014

      Litigants : S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

      Pet's Adv : M/S.V.SASIKUMAR

      Res's Adv : TAKES NOTICE

      Last Date of Hearing : ---

      Next / Final Date of Hearing : Thursday, August 27, 2015

      Case Updated On : Thursday, August 27, 2015

      Category : Service


      Connected Application(s)

      MP(MD) 4 2015

      Connected Matter(s)
      No Connected Cases
      Back



      when will adw 30% case will end ?

      one year finish. but not end 100% case

      what is the reason for dalay of end of the case?

      hello kalvi seithi admin akilan rajkumar karthik rajalingam yuvaraj senthil raja& etc sirs


      any news 30% of adw case end of the date ?

      hearing date?



      please tell any information

      Delete
    4. ஆதிதிராவிடர் நலத்துறை இ.நி.ஆ 30% வழக்கு நிலவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.........................................நண்பர்களே..............................................

      Delete
  2. Previous years group 2 & 4 question answers
    books available in any books .inform please friends

    ReplyDelete
  3. Previous years group 2 & 4 question answers
    books available in any books .inform please friends

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆதிதிராவிடர் நலத்துறை இ.நி.ஆ 30% வழக்கு நிலவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.....................நண்பர்களே......................................................!

      Delete
  4. How many months need to prepare for exam?

    ReplyDelete
    Replies
    1. Sathish sir what about TRB polytechnic college lecturer 2015? Plz kindly reply me...
      My mobile no.9597621658..

      Delete
  5. daily 5 hours padiga padikkuratha memory Panama purichu padiga. repeated ah padiga. therincha visayama erunthalum asalta vidama padiga. that's enough.

    ReplyDelete
  6. IQ means Tamil LA nunnarivununnarivu.

    ReplyDelete
  7. 2010cv cause judgement???????????????

    ReplyDelete
  8. Hi 10th mudichutu diploma pananan engg mudichutan but +2 padikala apply pana mudiuma

    ReplyDelete


  9. this case when finish?

    ramar &sudalai nanbarkale eppo than casea mudippinga?


    Madras High Court - Madurai Bench

    Case Status Information System

    Case Status : Pending

    Status Of : WRIT PETITION(MD) 16547 Of 2014

    Litigants : S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

    Pet's Adv : M/S.V.SASIKUMAR

    Res's Adv : TAKES NOTICE

    Last Date of Hearing : ---

    Next / Final Date of Hearing : Thursday, August 27, 2015

    Case Updated On : Thursday, August 27, 2015

    Category : Service


    Connected Application(s)

    MP(MD) 4 2015

    Connected Matter(s)
    No Connected Cases
    Back



    when will adw 30% case will end ?

    one year finish. but not end 100% case

    what is the reason for dalay of end of the case?

    hello kalvi seithi admin akilan rajkumar karthik rajalingam yuvaraj senthil raja& etc sirs


    any news 30% of adw case end of the date ?

    hearing date?



    please tell any information

    ReplyDelete
  10. ஆதிதிராவிடர் நலத்துறை இ.நி.ஆ 30% வழக்கு நிலவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.........................................................................................நண்பர்களே.............................................................................................................

    ReplyDelete
  11. Supreme court case listed on
    06/11/2015 FRIDAY

    ReplyDelete
  12. Supreme court case listed on
    06/11/2015 FRIDAY

    ReplyDelete
  13. SUPREME COURT OF INDIACase StatusStatus : PENDINGStatus of:Special Leave Petition (Civil)29245OF2014V. LAVANYA & ORS..Vs.THE STATE OF TAMIL NADU & ORS.Pet. Adv.:MR. T. HARISH KUMARRes. Adv.:MR. M. YOGESH KANNASubject Category:SERVICE MATTERS-RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENTAppealed Against:WA 1031/14OFHIGH COURT OF MADRASListed 4 times earlierLikely to be Listed on:06/11/2015Last updated on Oct 13 2015

    ReplyDelete
  14. SUPREME COURT OF INDIA
    Case StatusStatus : PENDINGStatus of:Special Leave Petition (Civil)29245OF2014V. LAVANYA & ORS..Vs.
    THE STATE OF TAMIL NADU & ORS.
    Pet. Adv.:MR. T. HARISH KUMARRes. Adv.:MR. M. YOGESH KANNA
    Subject Category:SERVICE MATTERS-RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
    Appealed Against:WA 1031/14OFHIGH COURT OF MADRAS
    Listed 4 times earlierLikely to be Listed on:06/11/2015
    Last updated on Oct 13 2015

    ReplyDelete
    Replies
    1. Sir appo 6.11.2015 than case hearing ah?

      Delete
    2. Hearing anaiku vara Chance iruku narmatha mam . any doubt pls mail me or contact my number

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. http://www.indianuniversityquestionpapers.com entra valaithalathil palaya vinathalkal download seiyalam

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Nan mk university la B.A tamil muduchen .distance education .nan eppadi pstm certificate vanguradhu ......................................pls tell me friends. ....................

    ReplyDelete
  19. Group 4 counselling eppo varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி