கல்வித் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் 100 சதம் நிறைவேற்றுவார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2015

கல்வித் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் 100 சதம் நிறைவேற்றுவார்

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை, முதல்வர் ஜெயலலிதா 100 சதவீதம் நிறைவேற்றுவார் என, மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் தெரிவித்தார்.பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க திண்டுக்கல் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.


தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் வெ. சம்பந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அ. சிவக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாநிலத் தலைவர் பொ. சௌந்தரராஜன், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், அனைத்துத் துறைகளிலும் இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது போல், பள்ளிக் கல்வித் துறையிலும் ஏற்படுத்த வேண்டும்.


நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் திரளாகக் கலந்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து, இக் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என நிர்வாகிகள் சார்பில், அமைச்சர்நத்தம் விசுவநாதனிடம் வலியுறுத்தப்பட்டது.


அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன் பேசியதாவது: மாவட்டக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உடனடியாகஏற்படுத்தப்படும். கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை மூலம் கருத்துரு பெற்று, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.


பள்ளி கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா 100 சதவீதம் நிறைவேற்றுவார் என்றார்.கூட்டத்தில், எம்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, வேணுகோபாலு, மேயர் மருதராஜ், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலர் த.ல. சீனிவாசன், பொருளாளர் ப. நீதிமணி, இணைச் செயலர் பா. மணிவண்ணன், மாவட்டப் பொருளாளர் சே. முகமது ரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி